கடலமுதே செங்கரும்பே அருட் கற்பகக் கனியே
உடலுயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல்விடை யார்ஒற்றி யார் இடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே
-- வள்ளலார்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க் கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
------------------- -அபிராமிப் பட்டர்
No comments:
Post a Comment