24 January 2013

100. திருவருட்பா - நெஞ்சறிவுறுத்தல்

                                            2013 -ஜனவரி 24, ஶ்ரீநந்தன, தை 11, வியாழன்

தினசரி தியானம் வலைப்பதிவு தொடங்கி 100 ஆவது பதிவை, சதாசர்வமும் இதயகமலத்தில் வீற்றிருந்து திருவருள் புரியும் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானார்க்கு சமர்ப்பிக்கிறேன்.


                              வெண்ணீ றணிந்து  விதிர்விதிர்த்து  மெய்பொடிப்பக்
                              கண்ணீர் அருவி கலந்தாடி - உண்ணீர்மை

                              என்புருகி  உள்ளுருகி இன்பார்  உயிருருகி
                              அன்புருகி  அன்புருவம்  ஆகிப்பின் - வன்பகன்று

                              புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்
                              கண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங்

                              கன்பர்க் கருளும் அரசே அமுதேபேர்
                              இன்பக் கடலே எமதுறவே - மன்பெற்று

                              மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
                              ஏற்றுவந்த  மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்

                              உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
                              அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்
                              வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்து உயர்கோல்
                              தேன்போல் மதுரிக்கும் தேவனெவன்?

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Congratulations on your laudable effort! வள்ளலாரின் அருள் அனைவரையும் அன்பு மழையில் குளிர்விக்கட்டும்.

    amas32

    ReplyDelete