2013, ஜனவரி 19, ஶ்ரீநந்தன, தை 6, சனிக்கிழமை.
திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந் தருளும்
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான் கொளும் பித்தன்மலை
மருமான் இடங்கொள் பெண்மானே வடிவுடை மாணிக்கமே.
--வள்ளலார்
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.
----அபிராமிபட்டர்
No comments:
Post a Comment