14 January 2013

90. அபிராமி அந்தாதி

                                                     கணபதி காப்பு

                          தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்  தில்லை
                          ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே! உலகேழும் பெற்ற
                          சீரபிராமி யந்தாதி எப்போதும் என்சிந்தையுள்ளே
                          காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.

சிவபெருமானுக்குப் பிடித்தது கொன்றைமலர். அன்னை பார்வதிக்கு உகந்தது சண்பக மலர். 
அம்மையப்பனாக விளங்கும் ஈசன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் திருநடனம் புரிகின்றார்.
அவருடைய இடப் பாகம் கொண்ட உமையவளின் மைந்தனே.ஏழு உலகங்களுக்கும் அன்னையாய்,
சிறப்புப் பொருந்திய அபிராமி என்ற பெயருடன் திருக்கடையூரிலே வீற்றிருக்கும் அன்னைக்கு
அந்தாதியாக நான் பாடிய சொல் மாலை என் உள்ளத்தில் எப்போதும் மணம் வீசி,  முழுமை பெற கார்மேகம்   போலக்  கருணை மழை பொழியும் கணபதியே அருள் புரிவாய்.

No comments:

Post a Comment