2013 - ஜனவரி 20, ஶ்ரீ நந்தன தை 7, ஞாயிறு
உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னே அப்பொன் அற்புதஒளியே மலர்ப் பொன்வணங்கும்
அன்னே எம்ஆருயிர்க்கு ஓருயிரே ஒற்றியம் பதிவாழ்
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- வள்ளலார்
சென்னியது உன் பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன்றன் பரஆகம பத்ததியே.
- அபிராமிபட்டர்
No comments:
Post a Comment