கண்டேன் களித்தேன் கருணைத் திருவமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் ---கொண்டேன்
அழியாத் திருவுருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான்.5
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் --ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேனருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.6
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment