21 May 2014

6. அருணாசல அட்சர மணமாலை



6. ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்
     இதுவோ உனதருள் அருணாசலா

பெற்றதாயை விட பெரிதும் அருள் புரிபவனே, இளம் வயதில் அருணாசலப் பெயர் கேட்ட மாத்திரத்தில்
ஆன்மானுபவம் ஏற்படும்படிச் செய்தாயே! உன் கருணையே கருணை!

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ,' அன்னையினும் தயவுடையோய்,' தாயிற் சிறந்த தயவான தத்துவனே,' என்று இறைவன் தாயினும் மேலானவன் என உணர்த்தும் பாடல்கள் பக்தி இலக்கியத்தில் நிறையவே உள்ளன.
முதலில் அகம் புகுந்து ஈர்த்து, உள்ளத்தில் சிறை வைத்து, சிறையிலிருந்து விடுவிக்காமல் உலகப் பழியிலிருந்து தப்பித்து, இனி பிரிவே இல்லாமல் தன்னை ஆண்டுகொண்ட அருணாசலன் யார்?
இவ்வுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னலமற்ற அன்பைக் காட்டுபவள் தாய்தான். அதேபோல அருணாசலன் தனக்கு ஆன்ம சாம்ராஜ்யத்தைக் காட்டி பேரருள் புரிந்த
தாயானவர், தன்னை ஆட்கொண்டவர் என்பதை இக்கண்ணியால் உணர்த்துகிறார். 

2 comments:

  1. தினம் ஒரு திருக்குறள் மாதிரி "அட்சர மணமாலை" நன்றாக இருக்கிறது.அருணாச்சல ஜோதியை பரப்புங்கள் இவ்வுலகிற்கு !!

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    ReplyDelete