30 May 2014

15. அருணாசல அட்சர மணமாலை

 கண்ணுக்குக் கண்ணாய் கண்ணின்றிக்
    காணுனைக் காணுவது எவர்பார் அருணாசலா!

கண் இருக்கிறது. கண்ணுக்கு ஒரு கண் இருக்கிறதா?
கண்ணுக்குக்  கண் உள்ளதாம்!
ஆனாலும் கண் இல்லாமல் காண்கிறாராம்!
கண்ணே இல்லாமல் பார்ப்பவர் யாரோ!
பார் அருணாசலா!
''கண்ணின்றி காண் உனை காண்பது எவர்?''
''கண்ணே அக் கண்ணின் மணியே மணியில்  கலந்து ஒளி செய் விண்ணே"
என வடிவுடை அம்மையை அழைக்கிறார் வள்ளலார்.
கண்ணுக்குள் உள்ளது கண்மணி. அதற்கு ஒளிதருவது, ஒளியைப் பார்க்க உதவுவதுஆன்மசக்தி.
அதை உணர வழிசெய்வது மனம்.
கண் பார்க்க உதவும்.'கண்ணுக்குக் கண்'
மனதிற்கு ஒளிதரும்.
காண்பவர் கண்ணுக்குக் கண்ணாக நின்று, கண்கள் இல்லாமலே காண்பவனாகிய உன்னை
எவரால் காணமுடியும்?
உன்னைக் காண எனக்கு அருள் தருவாய்.


No comments:

Post a Comment