காந்தம் இரும்பு போல் கவர்ந்தெனை விடாமல்
கலந்தெனோடு இருப்பாய் அருணாசலா
இரும்பைக் காந்தம் கவர்கிறது! அதுபோல என்னை நின்பால் கவர்ந்திழுத்து பிரிவேயின்றி
எப்போதும் என்னோடு இரண்டறக்கலந்திருப்பாய் அருணாசலா.
அடுத்து ஏழு கண்ணிகள் அருணாசலனிடம் பிரார்த்தனையாய் மலர்கிறது.
அருணாசல அருட்பெருஞ் சோதி!
No comments:
Post a Comment