17 May 2014

2. அருணாசல அட்சரமணமாலை

2. அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
    அபின்னமாய் இருப்போம் அருணாசலா


முதல் கண்ணியில் 'அகமே நினைப்பவர்' என்றார். 
அகத்தில் நினைப்பவர் இதயத்தில் எப்படி இருப்பார்? 
அழகு சுந்தரமாய் இருப்பார்களாம். அழகு, சுந்தரம் இரண்டும் இருவேறு சொற்களானாலும் பொருள் ஒன்றே! 
என் அகத்தில் இருக்கும் நீயும், நானும் இருவராய் இல்லாமல் ஒருவராய் இருப்போம்.
பின்னம் பிரிக்கக் கூடியது ஆதலின் அபின்னமாய் பிரிக்கமுடியாதவர்களாய் இருப்போம்.
ஶ்ரீரமணரின் தாய் அழகம்மை, தந்தை சுந்தரம். மனம் ஒருமித்து வாழ்ந்த அவர்களைப் போல் 
'என் அகமும் நீயும் ' பிரிக்க முடியாதவர்கள்!
மலை உருவில் உயிரற்றதாக  விளங்கும் நீயும்,  உயிருள்ள மனிதனாக விளங்கும் நானும் உண்மையில் பார்க்கப் போனால் ஒரே பொருளாகிய ஆன்மாவே.
அருணாசலனும் தானும் பிரிக்க இயலாது ஒன்றானதை இங்கே குறிப்பிடுகிறார்.



No comments:

Post a Comment