14 May 2014

அருணாசல அட்சரமணமாலை- பாயிரம்

                                                                                பாயிரம்
(முகவைக் கண்ன முருகனார் அருளியது)

தருணா ருணமணி கிரணா வலிநிகர்
தரும் அக்ஷரமண மகிழ்மாலை
தெருணா டியதிரு வடியார் தெருமரல்
தெளியப் பரவுதல் பொருளாகக்
கருணா கரமுனி ரமணா ரியனுவ
கையினாற் சொலியது கதியாக
அருணா சலமென அகமே அறிவொடும்
ஆழ்வார் சிவனுல காள்வாரே.

விண்ணிலே பவனி வருகிற இளஞ்சூரியக் கிரணங்களின் ஒளி வரிசை போல, ஒளி பொருந்திய அக்ஷரங்களால் ஆன மனதை மகிழ்விக்கும்  சொல் மாலை! உண்மையான அடியார்களின் மனக் கலக்கம் நீங்குவதற்காக, கருணை நிறைந்த ரமண முனிவர் தனக்கு அருணாசலர் மீது உண்டான பிரேமையினால் மனமகிழ்ந்து இப்பாமாலையை அருளினார். இதனைப் பாடி அருணாசலம அகம் என தியானித்து  தன்னுள்ளே ஆழ்பவர்கள்  சிவனுலகு ஆளப்பெறுவர்.

அடியவர்களின் மனதிலே எழுகின்ற பல வினாக்களுக்கும் விடை சொல்லித் தெளியவைப்பதற்காக,
ஶ்ரீ ரமணரால்  பாடப்பட்டது அருணாசல அஷரமணமாலை.  சூரிய கிரணங்கள் போல் ஒளிவீசி, மனதைத் தெளிவடையச் செய்வது ரமணமாலை. இதனை ஓதுபவர் தன்னுடைய ஆன்மாவே அருணாசலமாய்
ஒளிவீசுவதை உணர்வர். உணர்பவர் பரசிவத்தையும் அறிவர்.

THE MARITAL GARLAND OF LETTERS

This joyful marital garland of letters which resembles a beam of the rays of the rising  sun was sung by the noble Sage Ramana, the ocean of compassion, with the object of removing the delusion of the devotees who sought his grace.  Those who look upon it as their sole refuge will realize within themselves that they are  Arunachala and will reign in the world of Siva.

( Translation courtesy Sri Ramanasramam)







No comments:

Post a Comment