18 May 2014

3.அருணாசல அட்சர மணமாலை

3. அகம் புகுந்து ஈர்த்து உன் அககுகை சிறையா
     அமர்வித்தது என்கொல் அருணாசலா

ஈர்த்தல் என்றால் இழுத்தல். காந்தம் இரும்பை  ஈர்க்கிறது. அதுபோல என்னுடைய அகத்தில் புகுந்து
என்னை உன்னோடு இழுத்துக் கொண்டாய் அருணாசலா!

அதன் பின் சும்மா இருந்தாயா? என்னை உன்னுடைய அகத்தில் வேறு எங்கும் போக முடியாமல் சிறை வைத்துவிட்டாய்! அன்புச் சிறை! எதற்காக இப்படிச் செய்தாய் என்று சொல் அருணாசலா!
இறைவனாம் அருணாசலன் ஶ்ரீரமணரின் இதயத்தில் புகுந்து  ஈர்த்து தன்னுடைய இதய குகையில் அவரை சிறை வைத்து விட்டானாம்! எத்தனை அழகான சொல்நயம்! அருணாசலம் வந்த பின் ஶ்ரீரமணர்
திருவண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


நாயகி நாயகன் பாவம் வெளிப்படும் கண்ணி இது. தலைவன் தலைவி வீட்டிற்குள் வலியப் புகுந்து அவளைக் கைப்பற்றிச் செல்கிறான். எதற்காக இப்படிச் செய்தாய் என்று கேட்கிறாள் தலைவி!

No comments:

Post a Comment