ஶ்ரீ ரமணரின் அருணாசல அட்சரமணமாலை.
மெளனத்தால் தன்னை நாடி வந்தவர்களுக்கு உபதேசம் செய்த மகாயோகி
ஶ்ரீரமணர்.
நினைத்தாலே முக்திதரும் திருவண்ணாமலை புனிதமான தலம்.
அட்சரமணமாலை ஶ்ரீபகவான் அருணாசலேசுவரன் மீது எழுதிய
முதல் தோத்திரப் பாமாலை.
ஆன்ம சமர்ப்பணத்திற்கு வழி கோலும் சொல்மாலை.
108 முறை அருணாசல நாமம் வருவதால் மந்திரம் ஓதிய பலனைத் தருவது,
'அ' என்ற தமிழ் எழுத்தில் ஆரம்பித்து அருணாசல சிவநாமத்தில் நிறைவு பெறுகிறது.
இருவரிக் கண்ணிகளாக மனனம் செய்யவும், நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.
பக்தியுடன் இதனைப் படிப்பவர்கள் அருணாசலனுக்கு அணிவிக்கும் 'மணமாலை'யாக விளங்குகிறது.
அமைதிப் பேரலைகளில் மூழ்கச்செய்யும் அன்னை, அரவிந்தர் சமாதி, ஶ்ரீரமணபகவானின் தியான அறை,
வடலூர் வள்ளலார் கடைசியாகத் தாளிட்டுக் கொண்டமேட்டுக் குப்பத்து 'சோதி' அறை இம்மூன்று இடங்களும் அளிக்கும் ஆழ்ந்த ஆனந்தத்தை, அமைதியை நான் வேறு எந்த ஆலயத்திலும் அடைந்ததில்லை! ஶ்ரீஅரவிந்த ஒளி, ஶ்ரீஅருணாசல ஒளி, ஶ்ரீராமலிங்க ஒளி, முக்கோணத்தில் ஒளிரும் ஒளி!
1990 களில் முதன்முறையாக 'அட்சரமணமாலை' புத்தகம் எனக்குக் கிடைத்தது.. நூற்றாண்டு கொண்டாடும் இந்நூலை அப்போது படித்தபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை! எளிதில் மனப்பாடம் செய்யவும், அரிய அமைதியை அளிக்கவும் வல்ல இந்நூலுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர்.
ஆன்மாவே அருணாசலம்! அருணாசலனுக்கு ஆத்மார்த்தமாக சமர்ப்பிக்கும் அட்சர மலர்களால் ஆன மாலை, ரமண மாலை, மணமாலை, அட்சரமணமாலையை வலைப் பதிவு செய்ய வேண்டும் எனத்தோன்றியதால் இதனை எழுத முயன்றுவருகிறேன்.
வரும் வாரம் முதல்...................!
வரும் வாரம் முதல்...................!
No comments:
Post a Comment