2 May 2014

திருவருட்பா - ஐந்தாம் திருமுறை - சண்முகர் கொம்மி - 1

இராகம் -ஆனந்தபைரவி - ஆதி தாளம்

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன் தோற்றத்தைப்  பாடி அடியுங்கடி.

மாமயி லேறி வருவாண்டி -அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமை யிலாத புகழாண்டி - அவன் சீர்த்தியைப் பாடி யடியுங்கடி.

பன்னிரு தோள்க ளுடையாண்டி - கொடும் பாவிகள் தம்மை அடையாண்டி
என்னிரு கண்க ளனையாண்டி - அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.

சீர்திகழ் தோகை மயின்மேலே - இளஞ் செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருஞ் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
                                                                                   
அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை.

No comments:

Post a Comment