திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணையதாகும் - திரு
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும் - திரு
திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் - திரு
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் - திரு
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் -திரு
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே - திரு
திருச்சிற்றம்பலம் --அருணகிரிநாதர்
No comments:
Post a Comment