அன்னே எனைத்தந்த அப்பா என்றேங்கி
அலறுகின்றேன்
என்னே இவ்வேழைக்கு இரங்காது நீட்டித்து
இருத்தல் எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப்
பொருப்பமர்ந்த
மன்னே கலப மயில் மேல் அழகிய
மாமணியே.
பொருள்: என் செல்வமாகிய பொன்னெ, நற் குணங்களாகிய மலையே, திருத்தணிகைமலையில் கோயில் கொண்டிருப்பவனே, அரசே,தோகைமயில்மீது அழகிய உயர்ந்த ஒளிவீசும் மணியாய் வீற்றிருப்பவனே!உன் தரிசனம் பெற வேண்டி அன்னையே, அப்பா என்று மிகுந்த ஏக்கத்துடன் அலறி அழைக்கின்றேன், அது உன் செவிகளில் விழவில்லையா? இந்த ஏழை மீது ஏன் இன்னும் இரக்கம் கொள்ளாது இருக்கின்றாய்? விரைவில் வந்து தரிசனம் தருவாயாக!
No comments:
Post a Comment