திருவெறும்பியூர்
- இராப்பள்ளி
நின்றெழல்மெய் அன்று எனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே -
இரவில் உறங்கச் செல்பவன் விழித்தெழுவான் என்பது நிச்சயமில்லை. எனவே செய்யவேண்டிய நற்காரியங்களை உடனுக்குடன் செய்துவிட வேண்டும். நிலையாமையை உணர்ந்தவர்கள் அறம் நிலைபெற்ற திருவெறும்பியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வாழ்த்தி வணங்குவார்கள்.
இவ்வூர் திருவரம்பூர், திருவெறும்பூர், பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினகூடம், பிரமபுரம், எறும்பீசம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது.தென்கயிலாயம் எனவும் வழங்கப்படும். இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்டனர் ஆதலால் எறும்பியூர் எனப்பட்டது.
இக்கோயில் அமைந்துள்ள கற்பாறை, யானைபோல் காட்சியளிக்கிறது. இதனடியில் உள்ள ஊர் எறும்பியூர் எனப்பட்டது. 'எறும்பி' என்றால் யானை.
இறைவன்: எறும்பீசுரர்
இறைவி : நறுங்குழல் நாயகி
தலமரம் : வில்வம்
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment