28 April 2014

அம்பலத்தரசே அருமருந்தே

அம்பலத் தரசே அருமருந்தே
ஆனந்தத் தேனே அருள் விருந்தே
பொதுநடத் தரசே புண்ணியனே
புலவரெலாம் புகழ் கண்ணி யனே
மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே
ஆனந்தக் கொடியே இளம்பிடியே
அற்புதத் தேனே மலைமா னே
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந்தரகுஞ் சிதநடராஜா
                ------------
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

No comments:

Post a Comment