27 April 2014

நல்ல மருந்து - 2

வைத்தீசுவரன் கோயில்

பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
      பேசப் படாத பெரிய மருந்து

இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
       என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து (நல்ல)

மாலயன் தேடும் மருந்து - முன்னர்
      மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து

காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
       காணுங் கனவினுங் காணா மருந்து (நல்ல)

                                                 - வள்ளலார்


No comments:

Post a Comment