18 April 2014

ஆனந்தானுபவம்

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ண உண்ண ஊட்டுகின்றான் நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.

திருச்சிற்றம்பலத்தே திருநடனம் புரியும் சிவபெருமானின் கருணையை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
என்னுடைய பல குற்றங் குறைகளை யெல்லாம் பொறுத்துக் கொண்டு எனக்கு அருள் செய்கிறான்.
நான் பலவற்றையும் நினைக்கின்றேன்.  நினைத்ததை எல்லாம் நிறைவேற்றுகின்றான்.
நான் உண்பனவற்றை மேலும் மேலும் உண்ணும்படி ஊட்டுகின்றான்.
அவனுடைய திருவருட் கருணையை என்ன சொல்லி போற்றுவேன்! 

2 comments:

  1. அருமையான பாடல், அதற்கு உங்கள் தெளிவான விளக்கம், நன்றி.

    amas32

    ReplyDelete
  2. உங்கள் அன்பான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete