15 April 2014

அருளின்றி வாடுதல் அழகோ?

நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
கோலச் சடைக்கணிந்த  கோமளமே - ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
சந்தோட மோநின் றனக்கு.

ஆலகால விஷத்தை அருந்தியதால் நீலநிறமாகக் காணப்படுகிற கழுத்தையுடைய  ஒளிப்பிழம்பே.
கங்கையை அழகிய சடையிலே தரித்த அழகனே.
இவ்வுலகில் நீ அருள் செய்யாத காரணத்தால் சிறியேனாகிய நான் வாடுகிறேன்.
நான் வருந்துவது உனக்கு சந்தோஷமா? சொல்வாயாக.

கருணையுடன் எனக்கு அருள் புரிவாயாக.

No comments:

Post a Comment