16 April 2014

நற்றுணையாவது நமச்சிவாயமே

நற்றுணை விளக்கம்

காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகள் ஏவினும் காலனே வரினும்
பூவின் மன்னவன் சீறினும் திருமால்
போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.

அடடா, என் மனமே எதற்காக ஓய்வில்லாமல் துயரடைகிறாய்? என்ன துன்பம் உனக்கு? எதற்காக பயப்படுகிறாய்? உனக்குத் தெரியாதா உன்னைக் காப்பாற்றும், சதா உனக்குத் துணையாகும் நமச்சிவாய மந்திரம் உன்னோடு இருக்க அஞ்சவேண்டாம் என்று? முன்னொரு காலத்தில் திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எறிந்த போது அவரைக் கரையில் சேர்த்தது நமச்சிவாய மந்திரம் என்பதை அறிவாய்.
தேவர் உலகின் மன்னன் இந்திரனே எதிர்த்தாலும்,
மன்மதன் தன் கணைகளை ஏவி காம மயக்கமுறச் செய்தாலும்,
காலனே வந்தாலும்,
தாமரைமலரினான் பிரமனே சீறினும்,
திருமால் போரிட வந்தாலும் நமக்கு ஒரு பொருட்டல்ல!
நமக்குத் துணையாய் இருக்கும் நமச்சிவாய மந்திரம் இருக்க பயம் ஏன்?

நமச்சிவாய சிவாய சிவ நமச்சிவாய சிவாய சிவ நமச்சிவாய.

 







3 comments:

  1. ஓம் நமசிவாய!

    amas32

    ReplyDelete
  2. நமச்சிவாயம் அருள் புரியட்டும்

    ReplyDelete