14 April 2014

என்ன கைமாறு செய்வேன்?

சாற்றுவேன் எனது தந்தையே தாயே
   சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
   பூரணா எனஉல கெல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
   தூயபேர் உதவிக்கு நான் என்
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
     அப்பநின்  சுதந்தரம் அன்றோ.
                                   
இறைவனிடம் தாம் பெற்ற பேற்றை, அருளை அடிகளார் வியப்போடு எடுத்துக் கூறுகிறார்.
இறைவனே,
என்னுடைய தந்தையும்,தாயும், ஞான நல்லாசிரியனும் நீயே எனக் கூறி நின்னைத் துதிப்பேன். திருச்சிற்றம்பலத்தில்  ஆடல் புரியும் பரிபூரணனே என நின்னைப் போற்றுவேன்.
நீ எனக்கு அருள் செய்யாவிட்டால் உலகெலாம் அறியத் தூற்றுவேன்.
ஆயின் நீ எனக்கு செய்த தூய்மையான பேரருளாகிய உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? என்னுடைய உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும்  உனக்கே என சமர்ப்பித்து விட்டபின் எனக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது? எல்லாம் உனதன்றோ?

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை. இறைவனுடைய திருவருள் அனைவரிடமும் நிறைவதாக.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.






No comments:

Post a Comment