13 April 2014

பிரிவுமுண்டோ?

போக  மாட்டேன்  பிறரிடத்தே  பொய்யிற்  கிடந்து  புலர்ந்துமனம்
வேக   மாட்டேன்  பிறிதொன்றும்  விரும்ப  மாட்டேன் பொய்யுலகன்
ஆக    மாட்டேன்   அரசேஎன்  அப்பா  என்றன் ஐயாநான்
சாக    மாட்டேன்   உனைப்பிரிந்தால் தரிக்க  மாட்டேன்  கண்டாயே.

அரசே, என் தந்தையே, என் ஐயா,
இவ்வுலக மக்கள் எவரிடமும்  உதவி நாடிப் போக மாட்டேன்.
பிற மாந்தரின் பொய் வார்த்தைகளில் சிக்கி, மனமானது ஈரம்வற்றிப் போய்
நொந்து போக மாட்டேன்,
உன் திருவருளைத் தவிர இவ்வுலகில் எதையும் விரும்ப மாட்டேன்,
பொய்மை நிறைந்த இவ்வுலக மாந்தரில் ஒருவனாக மாட்டேன்,
ஐயனே நான் இறவேன்,
உன்னைப் பிரிந்தால், உன் நினைப்பினின்று என்மனம் அகன்றால் கணமும் உயிரோடு
இருக்க  மாட்டேன் அறிந்து கொள்வாய்.

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை!





No comments:

Post a Comment