தருதுயரம் தடாயேல் உன் சரணலலால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப் பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே.1
வாளா லருத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ
ஆளாவுன தருளே பார்ப்பன் அடியேனே.
No comments:
Post a Comment