13 November 2012

27.அன்பு

அன்பெனும்  பிடியுள்  அகப்படும் மலையே
       
           அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குள் படுபரம் பொருளே

           அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும்  கடத்துள் அடங்கிடும் கடலே

           அன்பெனும் உயிரொளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

           அன்புருவாம் பரசிவமே!

                 திருச்சிற்றம்பலம்.

அன்பே வடிவான ஆண்டவன் அனைவருக்கும் 

இந்த தீபாவளித் திருநாளில் ஆனந்தத்தையும்

அனைத்து  இன்பங்களையும் அருள்வானாக.

1 comment:

  1. நன்றி :-) இந்த இநிய பாடலுடன் வாழ்த்து சொன்னமைக்கு :-)

    amas32

    ReplyDelete