திருக்கோட்டாறு
- தெள்ளாற்றின்
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
கோட்டாறு மேவும் குளிர் துறையே -
தெளிவான நீரையுடைய ஆற்றங்கரை.அதில் நீண்ட தாறுகளைச் சுமந்து நிற்கும் வாழை மரங்கள்.
உயர்ந்து காணப்படும் இந்த வாழை மரங்கள் ஆற்றங்கரையை அலங்கரிக்கின்றன.
கோடை காலத்தில் ஆற்றங்கரை, மென்மையான தென்றல் காற்றுடன் குளிர்ச்சியைத் தந்து சுகமளிப்பது போல தன்னை நாடி வந்தார்க்கு மகிழ்வளிப்பவன் திருக்கோட்டாறு
என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமான்.
கோட்டாறு என்பது கொட்டாறு என வழங்கப்படுகிறது. திருநள்ளாறு புகை வண்டி நிலையத்துக்கு வட மேற்கில் 4 கி. மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சந்நிதிக்கு முன்பாகத் தேன்கூடு உள்ளது.
இறைவன் : ஐராவதீஸ்வரர்
இறைவி : வண்டமர் பூங்குழலி
தீர்த்தம் : வாஞ்சியாறு
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment