கன்றாப்பூர்
- வீறாகும்
இன்று ஆப்பூர் வந்தொட் டிருந்தது இவ்வூர் என்னவுயர்
கன்றாப்பூர் பஞ்சாக்கரப் பொருளே -
பஞ்சாக்கரப் பொருள்- 'நமசிவாய' என்ற திருவைந்தெழுத்தின் பொருள்.
ஆப்பு - முளைக்கம்பு ( மாடு, கன்றுகளைக் கட்டும் கம்பு)
வலிமையுடன் ஆப்பிலிருந்து தோன்றிய காலம் முதல் இன்று வரை சிறந்து விளங்கும் ஊர் என அறிந்தவர் கூறும் சிறப்புடையது திருக்கன்றாப்பூர் என்னும் இவ்வூர்.
சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவ சமயத்தைச் சார்ந்த ஒருவரை மணந்தாள்.
அவள் தன் கணவன் வீட்டாருக்குத் தெரியாமல் சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். எப்படியோ
கணவனுக்கு இது தெரியவர அவன் அச்சிவலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விடுகிறான்.
அந்தப் பெண்ணோ விடாமல் கன்றுக்குட்டி கட்டியிருந்த முளைக்கம்பையே (ஆப்பு) சிவனாகப்
பாவித்து பூஜை செய்து வந்தாள். அதைக் கண்ட அவள் கணவன் அந்த ஆப்பை வெட்ட
சிவபெருமான் அந்த ஆப்பிலிருந்து வெளிப்பட்டார் எனவும், அதனால் ஊரின் பெயர் கன்றாப்பூர் (கன்று+ ஆப்பூர்) என்றும் சொல்கிறார்கள். இறைவனுக்கு 'நடு தறி நாதர்' எனப் பெயர். கோடாரியால் வெட்டிய குறி இறைவன் மேல் உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment