தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை
எண்டோள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிற மெப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ.
மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்து கண்டாய். - அப்பர்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment