26 February 2013

பரசிவ வணக்கம் - தாயுமானவர்

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,
ஆனந்த பூர்த்தியாகி,
அருளொடு நிறைந்தது எது? தன் அருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடி எல்லாம்

தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்
தழைத்தது எது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமயகோ டிகளெலாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?
எங்கணும் பெருவழக்காய்,
யாதினும் வல்லஒரு சித்துஆகி, இன்பமாய்
என்றைக்கும்  உள்ளதுஎது?மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது?அது
கருத்திற்கு இசைந்தது அதுவே;
கண்டன எலாம்மோன உருவெளியது ஆகவும்
கருதிஅஞ் சலிசெய்குவாம்.



No comments:

Post a Comment