நல்ல மருந்து
நல்லமருந்து இம்மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து
அருள் வடிவான மருந்து - நம்முள்
அற்புதமாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்கு
இன்புருவாக இருந்த மருந்து - நல்ல
சஞ்சலம் தீர்க்கும் மருந்து - எங்கும்
தானேதானாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து - நல்ல
- வள்ளலார்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி
நல்லமருந்து இம்மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து
அருள் வடிவான மருந்து - நம்முள்
அற்புதமாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்கு
இன்புருவாக இருந்த மருந்து - நல்ல
சஞ்சலம் தீர்க்கும் மருந்து - எங்கும்
தானேதானாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து - நல்ல
- வள்ளலார்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி
No comments:
Post a Comment