திருச்சிற்றம்பலம்
ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே
ஒளி உயிர் வளர் தரும் உணர்வே
வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே
வெளி நிறை வளர் தரு விளைவே
வளி வளர் அசைவே அசை வளர் வளியே
வளியசை வளர் தரு செயலே
அளிவளர் அனலே அனல் வளர் அளியே
அளியனல் வளர்சிவ பதியே. -வள்ளலார்
No comments:
Post a Comment