தொடுக்கவோ நல்ல சொன்மலர் இல்லை நான்
துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை
ஊடுற்ற ஆணவ மாதி மலங்களைத்
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே
தயவு தான் நினக்கில்லை உயிரையும்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன்
விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
--திருவருட்பா
No comments:
Post a Comment