திருச் சிற்றம்பலம்
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகரில்லாத தனித் தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடியென் சென்னிமிசை வைத்த பெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனை வளர்க்குந் தெய்வ மகாதெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
No comments:
Post a Comment