பூமண மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணம் அருள் அருணாசலா
உலக விஷயங்களிலேயே நிலைத்திருக்கிறது பூவின் வாசனையொத்து விளங்கும் மனித மனம்.
இம்மனமானது முழுமையானவனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் போது முழுமையடைந்து பிரகாசிக்கிறது. இத்தகைய முழுமையான, இரண்டறக் கலந்து நிற்கும் உன்னத நிலையடைய அருள் புரிவாய் அருணாசலா.
அட்சரமணமாலை இந்தப் பூரணத்துவ நிலையை அடைய விரும்பும் அன்பர்களுக்கு வரப் பிரசாதம்.
ஈசாவஸ்ய உபநிஷதத்தின் மந்திரம் இதோ;
''ஓம் பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேமாவ சிஷ்யதே||
இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது.( ஈசாவாஸ்ய உபநிஷதம், ஶ்ரீராம கிருஷ்ண மடம் வெளியீடு)
வள்ளல் பெருமானின் ஆறாம் திருமுறை, அனுபவ மாலைப் பாடலைப் பாருங்கள்.சிவபோக அனுபவத்தை தலைவி, தோழி கற்பனைப் பாத்திரங்கள் மூலம் விளக்கும் ஆனந்த மயமான பாடல்.
''அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலரென் முடிமேல்
அணிந்து கொண்டேன் அன்பொடுமென் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும் அந்த மலர்மணத்தைத் தோழி
என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவன் றதுவே''
பிறவியின் பயன் இறைவனை அறிதலும், அவனை அடைதலும் ஆகும்.
அருட்பெருஞ்சோதி அருணாசலம் வாழ்க.

No comments:
Post a Comment