61. நைந்துஅழி கனியால் நலன்இலை பதத்தின்
நாடி உட்கொள் நலம் அருணாசலா
அருணாசலனே!
நினைந்து, உணர்ந்து, அகம்குழைந்து உருகி உன்னைச் சரணடைந்தேன்.
என் உள்ளக் கனியானது நீஆட்கொள்ள தகுதியுடையதாக இருக்கிறது.
நீ அதனை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
நைந்து அழுகிப் போன கனி எதற்கும் பயன்படாது.
அதுபோல எனக்கு அருள் செய்ய நீ காலம் தாழ்த்தினால் என் வாழ்வும் வீணாகிவிடும்.
எனவே அருள்செய்வாயாக.
அழுகிய கனியால் பயன் இல்லாதது போல பக்தி நெறியினின்று வழுவி, ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் என் மனம் அடங்குமானால் இந்தப் பிறவியால் பயனில்லை.
'நாடி உட்கொள்' -நீயே என்னைத் தேடி வந்து ஆட்கொள்வாயாக.

No comments:
Post a Comment