14 January 2013

90. அபிராமி அந்தாதி

                                                     கணபதி காப்பு

                          தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்  தில்லை
                          ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே! உலகேழும் பெற்ற
                          சீரபிராமி யந்தாதி எப்போதும் என்சிந்தையுள்ளே
                          காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.

சிவபெருமானுக்குப் பிடித்தது கொன்றைமலர். அன்னை பார்வதிக்கு உகந்தது சண்பக மலர். 
அம்மையப்பனாக விளங்கும் ஈசன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் திருநடனம் புரிகின்றார்.
அவருடைய இடப் பாகம் கொண்ட உமையவளின் மைந்தனே.ஏழு உலகங்களுக்கும் அன்னையாய்,
சிறப்புப் பொருந்திய அபிராமி என்ற பெயருடன் திருக்கடையூரிலே வீற்றிருக்கும் அன்னைக்கு
அந்தாதியாக நான் பாடிய சொல் மாலை என் உள்ளத்தில் எப்போதும் மணம் வீசி,  முழுமை பெற கார்மேகம்   போலக்  கருணை மழை பொழியும் கணபதியே அருள் புரிவாய்.

13 January 2013

89. ஶ்ரீ வில்லிபுத்தூர்

                                 ஶ்ரீ வில்லிபுத்தூர்

                  கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
                  சோதி மணிமாடந்  தோன்றுமூர்
                  நீதியால் நல்ல பத்தர் வாழுமூர்
                  நான்மறைகள் ஓதுமூர்
                  வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

                 பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
                 வேதமனைத்துக்கும்  வித்தாகும் - கோதை தமிழ்
                 ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
                 வையம் சுமப்பதும் வம்பு.

                 திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
                 திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
                 பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
                 பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
                 ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
                 உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
                 மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
                 வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

12 January 2013

88. திருவருட்பா - ஆனந்தானுபவம்


            கண்டேன்  களித்தேன்  கருணைத்  திருவமுதம்

            உண்டேன்  உயர்நிலைமேல்  ஓங்குகின்றேன் ---கொண்டேன்

            அழியாத்  திருவுருவம் அச்சோஎஞ்   ஞான்றும்

            அழியாச்சிற்  றம்பலத்தே   யான்.5

            பார்த்தேன்  பணிந்தேன்  பழிச்சினேன்  மெய்ப்புளகம்

            போர்த்தேன்என்  உள்ளமெலாம்  பூரித்தேன் --ஆர்த்தேநின்

            றாடுகின்றேன்  பாடுகின்றேன்   அன்புருவா  னேனருளை

            நாடுகின்றேன்  சிற்சபையை  நான்.6

                    திருச்சிற்றம்பலம்

11 January 2013

87. திருப்பாவை - ஆண்டாள்

         
                                 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப்

                                 பாடிப்பறை கொண்டு யாம் பெறு சம்மானம்

                                 நாடு புகழும் பரிசினால் நன்றாக

                                 சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

                                 பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

                                 ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

                                  மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

                                  கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

                                  ஆண்டாள்  திருவடிகளே சரணம்.

10 January 2013

86. திவ்யப்பிரபந்தம் - பூதத்தாழ்வார்


          உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்

          உளன் கண்டாய்  உள்ளுவாருள்ளத்து ----உளன்கண்டாய்

          வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும்

          உள்ளத்தினுள்ளானென்று ஓர்.

          ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்

          ஈரடியும் காணலாம்  என்னெஞ்சே! ---ஓரடியின்

          தாயவனைக் கேசவனைத்  தண்துழாய்மாலைசேர்

         மாயவனையே மனத்து வை. 

9 January 2013

85. திவ்யப்பிரபந்தம் - பொய்கையாழ்வார்


          வையம் தகளியா  வார்கடலே நெய்யாக

          வெய்ய கதிரோன் விளக்காக ---செய்ய

          சுடராழி யானடிக்கே  சூட்டினேன் சொல்மாலை

          இடராழி நீங்குகவே யென்று.


         வாய் அவனை அல்லது வாழ்த்தாது  கையுலகம்

         தாயவனை அல்லது  தான் தொழா --பேய்முலை நஞ்சு

         ஊணாக உண்டான் உருவொடு  பேரல்லால்

         காணா கண்  கேளா செவி.

8 January 2013

84. திருவருட்பா- மகாதேவமாலை


                      வித்தாகி     முளையாகி    விளைவதாகி

                                  விளைவிக்கும்  பொருளாகி  மேலுமாகிக்

                      கொத்தாகிப்     பயனாகிக்   கொள்வோனாகிக்

                                  குறைவாகி    நிறைவாகிக்   குறைவிலாத

                       சத்தாகிச்   சித்தாகி   இன்பமாகிச்

                                   சதாநிலையாய்    எவ்வுயிர்க்குஞ்    சாட்சியாகி

                       முத்தாகி  மாணிக்க  மாகித்     தெய்வ

                                    முழுவயிரத்   தனிமணியாய்   முளைத்த  தேவே.

                                       
                                                       திருச்சிற்றம்பலம்