Showing posts with label ஆழ்வார் திருமொழி. Show all posts
Showing posts with label ஆழ்வார் திருமொழி. Show all posts

10 January 2013

86. திவ்யப்பிரபந்தம் - பூதத்தாழ்வார்


          உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்

          உளன் கண்டாய்  உள்ளுவாருள்ளத்து ----உளன்கண்டாய்

          வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும்

          உள்ளத்தினுள்ளானென்று ஓர்.

          ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்

          ஈரடியும் காணலாம்  என்னெஞ்சே! ---ஓரடியின்

          தாயவனைக் கேசவனைத்  தண்துழாய்மாலைசேர்

         மாயவனையே மனத்து வை. 

9 January 2013

85. திவ்யப்பிரபந்தம் - பொய்கையாழ்வார்


          வையம் தகளியா  வார்கடலே நெய்யாக

          வெய்ய கதிரோன் விளக்காக ---செய்ய

          சுடராழி யானடிக்கே  சூட்டினேன் சொல்மாலை

          இடராழி நீங்குகவே யென்று.


         வாய் அவனை அல்லது வாழ்த்தாது  கையுலகம்

         தாயவனை அல்லது  தான் தொழா --பேய்முலை நஞ்சு

         ஊணாக உண்டான் உருவொடு  பேரல்லால்

         காணா கண்  கேளா செவி.

22 November 2012

36.தாலேலோ


மன்னுபுகழ்க் கவுசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னி நன்மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ  1




கொங்குமலி கருங்குழலாள்  கவுசலைதன் குலமதலாய்!

தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி!

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!

எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ  2

18 November 2012

32. திருமாலை -தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும்

அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்காமா நகருளானே!


வண்டினம் முரலும் சோலை மயிலினம் மாலும் சோலை

கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை

அண்டர் கோனமரும் சோலை அணிதிரு வரங்கமென்னா

மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே.


கங்கையிற் புனிதமாய காவிரிநடுவு பாட்டு

பொங்கு நீர்பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே.




17 November 2012

31. மாணிக்கக்கிண்கிணி

                                                     கைகொட்டி விளையாடுதல்

                           மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல்
                         
                           ஆணிப்பொன்னாற் செய்த ஆய்பொன்னுடை மணி

                           பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு

                           காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி.

                          பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி

                          தன்னரையாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட

                          என்னரை மேல் நின்றிழிந்து உங்களாயர்தம்

                          மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே! கொட்டாய் சப்பாணி


                                                                                                    ---- பெரியாழ்வார்      

16 November 2012

30. 9 ஆந் திருமொழி-வெண்ணெய் விழுங்கி

            வருக வருக வருக இங்கே
           
            வாமன நம்பி! வருக இங்கே

            கரியகுழற் செய்ய வாய் முகத்துக்

            காகுத்த நம்பி! வருகவிங்கே

            அரியனிவ னெனக்கின்று நங்காய்!

            அஞ்சனவண்ணா! அசலகத்தார்

            பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
         
            பாவியேனுக்கு இங்கே போதராயே.

                                   - பெரியாழ்வார்

           

             

15 November 2012

29. திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

                                   -----------------------

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்து காணீரே.

                                             -பெரியாழ்வார் திருமொழி