விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்; மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள்; முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்; பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலும் செங்கோடன் மயூரமுமே.
திருச்சிற்றம்பலம்.
ஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்!

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்