7 January 2013

83. ஸர்வ நாயகிக்கு வந்தனங்கள்.


        பத்ரகாளி   துர்கா  பவானி  பராசக்தி

        பரிபாலினி  சித்தரூபிணி   ஸிம்மவாஹனி

        திவ்ய ராஜராஜேஸ்வரி  வித்வபூஷிணி

        மீனலோசனி  வீரமர்த்தினி  விமலினி

        ஸத்யவாணி  நித்யகன்னி தயாபரி----ஓம் நமஹ.

        குண்டலி  சந்திரமண்டலி  இளம்கோமளி

        இன்பசாமளி   சண்டிகா  சாமுண்டி

         பைரவி  சாவித்ரி  ஜெயகாயத்ரி

         அன்பர் நாயகி   ஆபத்பாந்தவி

         தூய வானவி  சோமசேகரி  ஓம் நமஹ.

6 January 2013

82. திருத்தொண்டத்தொகை


               தில்லைவாழ்  அந்தணர்தம்  அடியார்க்கும்  அடியேன்

               திருநீலகண்டத்துக்   குயவனார்க்கும்  அடியேன்

               இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

               இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

               வெல்லுமாமிக  வல்ல  மெய்ப்பொருளுக்கு அடியேன்

               விரிபொழில்சூழ்  குன்றையார்  விறன்மிண்டார்க்கு  அடியேன்

               அல்லிமென் முல்லையந்தார்  அமர்நீதிக்கு  அடியேன்

               ஆரூரன்  ஆரூரில் அம்மானுக்காளே.      -----சுந்தரர்

                                       
                           திருச்சிற்றம்பலம்

5 January 2013

81. திருவருட்பா


            பாட்டுவித்தால்   பாடுகின்றேன்   பணிவித்தால்

                பணிகின்றேன்   பதியே     நின்னைக்

            கூட்டுவித்தால்  கூடுகின்றேன்  குழைவித்தால்

                குழைகின்றேன்  குறித்த  ஊணை

            ஊட்டுவித்தால்   உண்கின்றேன்  உறக்குவித்தால்

                 உறங்குகின்றேன்  உறங்கா  தென்றும்

             ஆட்டுவித்தால்  ஆடுகின்றேன் அந்தோஇச்

                  சிறியேனால்  ஆவ    தென்னே.

                        திருச்சிற்றம்பலம்

4 January 2013

80. திருப்புகழ்--சிதம்பரம்


                 இருவினையின்  மதிமயங்கித்   திரியாதே

                 எழுநரகி    லுழலு நெஞ்சுற்      றலையாதே

                 பரமகுரு    அருள்நி  னைந்திட்  டுணர்வாலே

                 பரவுதரி   சனையை  யென்றெற்  கருள்வாயே

                 தெரிதமிழை   யுதவு  சங்கப்  புலவோனே

                 சிவனருளு   முருக செம்பொற்  கழலோனே

                 கருணைனெறி  புரியு  மன்பர்க்  கெளியோனே

                 கனகசபை  மருவு  கந்தப்  பெருமாளே.


                           திருச்சிற்றம்பலம்

3 January 2013

79. திருவருட்பா- சிற்சத்தி துதி


            பொருணற்    கொடியே  மாற்றுயர்ந்த   பொன்னங்  கொடியே  போதாந்த

             வருணக்       கொடியே   யெல்லாஞ்செய்  வல்லா  ரிடஞ்சேர்  மணிக்கொடியே

             தருணக்       கொடியே   யென்றன்னைத்  தாங்கி  யோங்கும்  தனிக் கொடியே

             கருணைக்   கொடியே   ஞானசிவ  காமக்  கொடியே   யருளுகவே.



                                                 திருச்சிற்றம்பலம்

2 January 2013

78.திருவருட்பா - சிற்சத்தி வணக்கம்

 
          ஜோதிக் கொடியே  யானந்த சொரூபக் கொடியே ஜோதியுருப்

          பாதிக்  கொடியே   ஜோதிவலப்  பாகக்   கொடியே யெனையீன்ற

          ஆதிக்  கொடியே  யுலகுகட்டி  யாளுங்  கொடியே  சன்மார்க்க

           நீதிக்  கொடியே  சிவகாம  நிமலக் கொடியே யருளுகவே.

                             
                                   திருச்சிற்றம்பலம்

1 January 2013

77. திருவருட்பா


                                  அனுபவநிலை


         நான் ஆனான்  தான் ஆனான் நானும்தானும் ஆனான்

         தேன் ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்

         வான் ஆனான் ஞானமணி மன்றில் ஆடுகின்றான்

         கோன் ஆனான் என்னுள் குலவுகின்ற கோமானே.


                              திருச்சிற்றம்பலம்